7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரம்: அவகாசம் தேவை - கவர்னர்

By saravanan

மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க சட்டத்திருத்த மசோதாவை தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. 

இந்த மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கவர்னர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் வந்தார். இதனால், மருத்துவ படிப்பின்  கலந்தாய்வில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக கவர்னருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு  தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதிலளித்து கூறியிருப்பதாவது,

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக அனைத்து நிலைகளிலும் ஆலோசனை நடந்து வருகிறது. இடஒதுக்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்க மூன்று முதல் நான்கு வாரம் கால அவகாசம் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

.
மேலும்