இ-பாஸ் விண்ணப்பிப்பது எப்படி?

By News Room

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும், மற்ற நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ- பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், மாவட்டங்களுக்கு உள்ளேயும் இ- பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறை நாளை மறுநாள் (17/05/2021) முதல் அமலுக்கு வருகிறது.

இ- பாஸ் விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்!

இ- பாஸ்க்கென்று தமிழக அரசு பிரத்யேக இணைய தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த இணைய தளத்தின் முகவரி https://eregister.tnega.org/#/user/pass ஆகும்.

இந்த இணைய தளத்திற்கு சென்று முதலில் தங்களது தொலைபேசி எண்ணை குறிப்பிட வேண்டும். பின்னர் அந்த தொலைபேசி எண்ணுக்கு 'ஓடிபி' எண்கள் வரும். அதனை உள்ளீடு செய்ய வேண்டும்.

பின்பு, எங்கிருந்து வருகிறீர்கள்? வெளிநாடுகளில் இருந்தா? வெளிமாநிலங்களில் இருந்தா?
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டுமா?

இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து விண்ணப்பிப்போரின் பெயர், தந்தை மற்றும் தாய் பெயர், எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும், அரசால் அங்கீகரிப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் எண்கள், எதற்காக செல்கிறீர் (திருமணம், இறப்பு, மருத்துவத் தேவை) ஆகியவையில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு விண்ணப்பித்ததற்கான எண் குருஞ்செய்தியாக வரும். அதனை செல்போனில் பதிவு செய்துக் கொள்ளலாம்.

.
மேலும்