பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடு - தமிழகம் மூன்றாம் இடம்

By News Room

இந்திய அளவில் பள்ளிக்கல்வித்துறையில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களின் தரவரிசை பட்டியல் மத்திய அரசின் கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம்  இடம்  பிடித்துள்ளது. 

2019-20ஆம் ஆண்டுக்கான இந்த தரவரிசைப் பட்டியலில் பஞ்சாப் 921 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், 912 புள்ளிகளுடன் சண்டிகர் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.

மூன்றாம் இடம் பிடித்த தமிழ் நாடு 906  புள்ளிகள் பெற்றுள்ளது. 901 புள்ளிகள் பெற்று கேரளா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அந்தமான் நிக்கோபர் தீவுகளும் 901 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. 

.
மேலும்