பரவும் கொரோனா: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

By SANTHOSH

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு மற்றும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை மத்திய, மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமிநாசினியைக் கொண்டு கழுவ வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை அரசு வழங்கியுள்ளது.

எப்படி பரவுகிறது கொரோனா? என்பது குறித்து பார்ப்போம்!

பெரிய நீர்த்துளிகள் மூலமாக பரவக்கூடிய வைரஸ் கொரோனா. ஒருவர் பேசும் போது, சிரிக்கும் போது, இருமும் போது நோய் பரவும் அபாயம் உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

ஒருவருடன் பேசும் போது முகக்கவசங்களை அணிவது அவசியம். கூடுதலாக இரண்டு முகக்கவசங்களை அணியலாம். எந்த அறிகுறிகளும் இல்லாமல் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளிடம் இருந்தும் நம்மை பாதுகாக்க முடியும். அடிக்கடி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். அவசரத் தேவைகள் ஏற்பட்டால் மட்டுமே வீடுகளை விட்டு வெளியேறவும். பொருட்கள் அல்லது மேற்பரப்புகளில் வைரஸ் இருக்கும் அபாயம் இருப்பதால், கைகளைத் தவறாமல் கழுவி சுத்தம் செய்வது முக்கியம். அடிக்கடி தொடும் மேற்பரப்புகள் மற்றும் பொருட்களை கிருமி நீக்கம் செய்து பராமரிக்க வேண்டும். வெளிப்புறங்களை விட உட்புறத்தில் வைரஸ் பரவக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதால் அறைகளில் காற்று அதிகம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். லேசான கொரோனா அறிகுறிகள் கொண்டவர்கள் வீட்டிலேயே சிகிச்சைப் பெற்றுக் கொள்ள முடியும். குறைந்த பட்சம் ஒரு வாரமாவது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அது தவிர, முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும். சுவாசிப்பதில் சிக்கல், தொடர்ந்து இருதய வலி, மன குழப்பம் இருந்தால் மருத்துவமனையை நாடுவது அவசியம்.  

.
மேலும்