பயணிகள் வரத்து குறைவால் சிறப்பு ரயில்கள் ரத்து'!- தெற்கு ரயில்வே அறிவிப்பு!

By News Room

தெற்கு ரயில்வே இன்று (18/05/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே 25-ல் கோவை- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் (06618), மே 26-ல் ராமேஸ்வரம்- கோவை வாராந்திர சிறப்பு ரயில் (06617), புதுச்சேரி- மங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் (06855) மே 20- ஆம் தேதி மற்றும் மே 27- ஆம் தேதி ரத்துச் செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில் மங்களூரு- புதுச்சேரி வாராந்திர சிறப்பு ரயில் (06856) மே 21- ஆம் தேதி மற்றும் மே 28- ஆம் தேதி ரத்துச் செய்யப்படுகிறது.

புதுச்சேரி- கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரயில் (06861) மே 23, மே 30 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமரி- புதுச்சேரி வாராந்திர சிறப்பு ரயில் (06862) மே 24, மே 31 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், மே 28- ல் காந்திதம் பிஜி- நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயிலும் (06335), மே 25- ல் நாகர்கோவில்- காந்திதம் பிஜி வாராந்திர ரயிலும் (06336) ரத்து செய்யப்படுகிறது." இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் பயணிகள் ரயில்களில் பயணம் செய்வது முற்றிலும் குறைந்துள்ளது. இந்த நிலையில் சிறப்பு ரயில்களை அடுத்தடுத்து ரத்து செய்து வருகிறது தெற்கு ரயில்வே என்பது குறிப்பிடத்தக்கது.

.
மேலும்