அதிமுகவில் மீண்டும் சசிகலா - மாவட்ட அதிமுக செயலாளர்  சையது கான்

By Senthil

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் லட்சுமிபுரத்தில் இருக்கும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கியமாக மாவட்ட செயலாளர் சையது கான்,  முன்னாள் எம்பி பார்த்திபன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சசிகலாவையும், தினகரனையும் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்வது குறித்து நடந்த கூட்டத்தில், இருவரையும் எந்தவித நிபந்தனையும் இன்றி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்ப பன்னீர்செல்வம் அறிவுறுத்தி இருக்கிறாராம்.

மேலும், அ.தி.மு.க.வில் மீண்டும் சசிகலாவை இணைக்க வேண்டும் என தேனி மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். கட்சிக்குள் உள்ள பிளவே தேர்தல் தோல்விக்கு காரணம் என தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் என குற்றம்சாட்டியுள்ளார். தொண்டர்களின் கோரிக்கையை தீர்மானமாக ஓ.பி.எஸ். இடம் வழங்கியுள்ளோம். தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு எடுப்பதாக ஓ.பி.எஸ். உறுதியும் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, சசிகலா - தினகரன் இருவரையும் கட்சியில் இணைத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் எனவும் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தெரிவித்தார்.

.
மேலும்