அ.தி.மு.க-வை என் உயிரிலிருந்து பிரிக்கமுடியாது - சசிகலா

By Ezhumalai

சசிகலா தொண்டர்களிடம் பேசும் ஆடியோ அவ்வப்போது வெளியாகிக்கொண்டே இருக்கிறது. அதேபோல இன்றும் ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது.

அதில் சசிகலா கூறியிருப்பதாவது,

இந்த நான்கு வருடமும் தொண்டர்களின் கடிதங்களுக்கு நான் பதில் போட்டுக்கொண்டேதான் இருந்தேன். தொண்டர்களின் கடிதங்களுக்கு பதில் போடும் பழக்கம் 1988லேயே எனக்கு ஆரம்பித்தது. அம்மாவுக்கு வரும் கடிதங்களுக்கு, என்னை படித்து, பதில் போடச்சொல்வார். அப்போதெல்லாம் செல்போன் கிடையாது. 

இப்போது வரும் கடிதங்களுக்கு பதில் எழுதினால், கொரோனா ஊரடங்கில் போய்ச்சேருமோ இல்லையோ என்றுதான், தொண்டர்களில் பேச ஆரம்பித்தேன். அதை சிலர் விமர்ச்சிக்கிறார்கள். ஆனால் தொண்டர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள். அதுவே எனக்குப் போதும்.


இந்த நான்குவருட சிறைத்தண்டனை அம்மா வந்து அனுப்பவிக்கவில்ல எனக்கு நிம்மதி. நான் போய் அனுபவிக்கிறேன் என்று சொல்லித்தான் சென்றேன்

அ.தி.மு.க-வுக்காக நான் அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன். அதை என் உயிரிலிருந்து பிரிக்க முடியாது. அப்படி இருக்கும்போது, தொண்டர்களின் மனக்குமுறலை கேட்டுக்கொண்டு, என்னால் சும்மா உட்காரிந்திருக்கமுடியாது. அதனால்தான் நான் எல்லோரிடமும் போனில் பேச ஆரம்பித்தேன்.

.
மேலும்