வைரலாகி வரும் சமந்தாவின் கருப்பு வெள்ளை வீடியோ

By Senthil

தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பல்வேறு மொழிகளில் நடித்து, அனைத்து தரப்பு ரசிகளையும் கவர்ந்தவர் நடிகை சமந்தா. இவர் பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். 

இவர் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஓ சொல்லுறியா பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் வைரலானது. இதையடுத்து சுவிட்சர்லாந்தில், சமந்தா பனிச்சறுக்கு செய்யும் வீடியோ வைரலானது.

இந்நிலையில், கருப்பு வெள்ளையில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

.
மேலும்