சபரிமலை தரிசனம்: பக்தர்களுக்கு கொரோனா இல்லை சான்றிதழ் கட்டாயம்

By nandha

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள போதும் பொதுமக்களின் நலன், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தி கொண்டு ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. 

எனினும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை உடன் இன்று முதல் திரையரங்குகள் மற்றும் பல மாநிலங்களில் பள்ளிகளும் திறக்கப்பட்டது. 

மத்திய அரசு வெளியிட்ட ஊரடங்கு தளர்வுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வழிபாட்டு தளங்களை திறக்கலாம் என்றது.  இதனையடுத்து கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் அக்டோபர் 16, 2020 முதல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டு கூறியிருப்பதாவது, 

திறக்கப்பட உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருபவர் கொரோனா இல்லை என சான்றிதழ் கட்டாயம் கொடுக்க வேண்டும். நாளொன்றுக்கு 250 பக்தர்கள் மட்டுமே அனுமதி.

சபரி மலை கோவிலில் மலையேற தகுதியுடன் தான் இருப்பதாக ஒரு உடல்நல தகுதிச் சான்றிதழும் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்றார்.  

.
மேலும்