நாகர்கோவில் அவியல் ரெசிபி செய்வது எப்படி?

By News Room

தேவையான பொருட்கள்
மாங்காய் - 1
வாழைக்காய் - 1
முருங்கைக்காய் - 1
கேரட் - 1
பீன்ஸ் - 5
கத்திரிக்காய் - 2
வெள்ளரிக்காய் - 1
புடலங்காய் - 1/2
கருணைக்கிழங்கு - 1/2
வெள்ளை பூசணிக்காய் - ½
சின்ன வெங்காயம் - 4
தேங்காய் எண்ணெய்
சீரகம் – ½ டீஸ்பூன்
பூண்டு – 2
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள்
கறிவேப்பிலை
தேங்காய் – அரை மூடி

செய்முறை
முதலில் காய்கறிகளைத் தண்ணீர் ஊற்றி நன்கு அலசி அதை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

பின்பு காய்கறிகளைக் கடாயில் போட்டு ½ கப் அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

இதற்கிடையில் மசாலாவை அரைத்துக் கொள்ளவும். அதற்கு தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை எடுத்துக் கொள்ளவும். இதை மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிப் பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.

இப்போது அரைத்த மசாலாவை வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி கலந்து விடவும்.
மேலே கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். விருப்பப்பட்டால் தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை தாளித்தும் இதில் சேர்க்கலாம்.

மசாலா, காய்கறிகளுடன் நன்கு சேர்ந்து அவியல் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சூப்பரான நாகர்கோவில் ஸ்பெஷல் அவியல் தயார்.

.
மேலும்