மீண்டும் பேசப்படும் ராமஜெயம் கொலை வழக்கு

By Senthil

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணைக்கு  சிபிஐக்கு உதவ தமிழக காவல்துறை அதிகாரிகள் பட்டியலை சமர்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் கோரியுள்ளது.

கடந்த 2012ல் திமுக அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

சிபிஐ விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனபதால் மாநில அரசே விசாரிக்க வேண்டும் என டிஜிபிக்கு மனு அளித்துள்ளதாகவும், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என ராமஜெயத்தின் சகோதரர் ரவிசந்திரன் வழக்கு.

விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு தருகிறோம் என்றும், விசாரணைக்கு உதவ காவல்துறை அதிகாரிகளின்  பட்டியல்களை தர தயாராக உள்ளதாகவும் விளக்கம் - தமிழக அரசு தரப்பு.

சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட கவரில் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ததை படித்த நீதிபதி வழக்கு சரியான கோணத்தில் செல்வதாக கருத்து.

தமிழக காவல்துறை விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும், விசாரணைக்கு உதவ காவல்துறை அதிகாரிகள் பட்டியலை  வழங்குகிறோம் என தமிழக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

.
மேலும்