காங்கிரஸ் கட்சி முதலில் தன்னை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் - டி.ராஜேந்தர்

By Senthil

காங்கிரஸ் கட்சி முதலில் தன்னை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் - டி.ராஜேந்தர் 

நேற்று அண்ணா நினைவு தினத்தையொட்டி சென்னையில் தியாகராய நகரில் நேற்று அவரது திருவுருவ படத்திற்கு நடிகர் விஜய டி.ராஜேந்தர் மலர்த் தூவி மரியாதை செய்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், தமிழ்நாட்டில் உள்ள பாமரனை கூட கட்சியில் இணைத்தவர் அறிஞர் அண்ணா. இதுவரை அண்ணா தொடங்கிய திராவிட கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தான் மாறி மாறி தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது.

மக்களவைத் தேர்தல் வரை என்ன செய்ய வேண்டும் என சொல்கிறேன். அதுவரை கட்சியில் உழைத்து வாருங்கள் என தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார். எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகிய 4 பேரும் அதிமுகவை அழித்துவிட்டார்கள். ஈழத் தமிழர்களை வஞ்சித்த காங்கிரஸ் கட்சியோடு திமுக கூட்டணி வைக்கும் வகை திமுகவுடன் நாம் கூட்டணி வைக்கமுடியாது.

காங்கிரஸ் கட்சி முதலில் தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்தியாவை பற்றி சிந்திக்கலாம். பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி எதுவுமே செய்யவில்லை. ராஜேந்தர் உள்ளாட்சி தேர்தலில் லட்சிய திமுக போட்டியிடவில்லை. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஈழத் தமிழர்கள் வாழ முடியாமல் தவிக்கின்றனர். உணவுக்கும் குடிநீருக்கும் பிரச்சினையாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஈழத் தமிழர்கள் மற்றும் இலங்கை மக்களை காப்பாற்ற வேண்டும் என தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் கோரிக்கை வைத்தார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஈழத் தமிழர்கள் வாழ முடியாமல் தவிக்கின்றனர். உணவுக்கும் குடிநீருக்கும் பிரச்சினையாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஈழத் தமிழர்கள் மற்றும் இலங்கை மக்களை காப்பாற்ற வேண்டும் என தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் கோரிக்கை வைத்தார் அவர். பாஜக தலைவர்கள் தமிழக பாஜகவில் உள்ள தலைவர்கள் தொடர்ந்து அந்த கட்சியில் நீடித்தால் தமிழகத்தில் தாமரை மலரவே மலராது. தற்போது உள்ளாட்சி தேர்தல் என்பதால் கொரோனா போய்விட்டதா என தமிழக அரசுக்கு அவர் கேள்வி எழுப்பினார். 

மேலும் கட்சியின் கட்டமைப்பு சரியாக இல்லாததால் கட்டமைப்பை வலுப்படுத்தி கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன் எனவும் மேலும் தெரிவித்தார்.

.
மேலும்