தேர்தல் இல்லாட்டி கொரோனா Makeup.. தேர்தல் வந்தால் கொரோனா Pack up ஆ?.. டி ராஜேந்தர் கேள்வி?

By Senthil

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், ஒரே கட்டமாக இன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திநகரில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகரும் லட்சிய திமுக தலைவருமான டி ராஜேந்தர் வாக்களிக்க வந்திருந்தார். அவர் தனது வாக்கை அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் வாக்களிக்க வந்தவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா? தேர்தல் வந்துவிட்டால் கொரோனா பேக் அப் ஆகிவிடுமா? தேர்தல் இல்லாத நேரத்தில் கொரோனா போட்டுக்கும் மேக்கப். தேர்தல் வந்துட்டா ஆயிடுமா பேக் அப்? ஆயிடுமா டேக் அப்? எங்கே போயிடுச்சி? இது என்னோட கேள்வி. தேர்தலுக்கு ஒரு சட்டமா? தேர்தல் வந்தால் மக்களுக்கு ஒரு கொண்டாட்டம் மாதிரி ஆகி போய்விட்டது. மக்களுக்கு கொரோனா காலத்தில் திண்டாட்டம். மக்களை குறை சொல்லவிரும்பவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் அது எலக்ஷனா இல்லை கலெக்ஷனா? அது போல் சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் இவையெல்லாம் ஒரு எலெக்ஷனா இல்லை கலெக்ஷனா?

இந்தக் கட்சி எவ்ளோ கொடுப்பாங்க, அந்த கட்சி எவ்ளோ கொடுப்பாங்க. இப்படி பேசிக்கிறாங்க. ஆனாலும் ஜனநாயகத்திற்காக வாக்களிக்கும் சில பேர் வாழ்க! சில பேர் பணநாயகத்திற்காக சிலர் பேர் ஓட்டு போடுறாங்க. அரசியல்வாதிகள் நாட்டை விற்கிறார்கள் என்றால் மக்கள் வோட்டை விற்கக் கூடாது. இப்படி விற்றால் உள்ளாட்சி துறையில் எப்படி நல்ல சாலை கிடைக்கும்? எப்படி நாடு நன்றாக இருக்கும்? மக்கள் சிந்திக்க வேண்டும். இப்படி பேசிக் கொண்டே இருப்பதால் என்ன மாற்றம் வரும் என கேட்கலாம். பேசிக் கொண்டே இருக்கலாம். மாற்றம் வரும் வரை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியை வச்சு ஓட்டு வாங்கினது அந்த காலம், இப்ப நோட்ட வச்சி வோட்டு வாங்கிடலாம் என ஒரு காலம் போய்க் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிக்குத்தான் வோட்டு. ஒன்று நாட்டை ஆளும் பிரதமர் மோடியின் பாஜகவுக்கு! இல்லாவிட்டால் ராகுல் காந்தியின் காங்கிரஸ் ! தாமரையா கையா என ஒரு கேள்வி வரும். அப்போது நாங்கள் லட்சிய ரீதியில் செயல்பட லட்சிய திமுகவில் முடிவெடுத்துள்ளோம். ஆனாலும் இந்த லட்சிய ரீதியாக இந்த ஜனநாயகத்தில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இங்கு வந்து வாக்களித்திருக்கிறேன் இவ்வாறு செய்தியாளர்களிடம்  பேசினார்.

.
மேலும்