சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை குளிர்வித்த கோடை மழை

By Senthil

கடந்த வார இறுதியில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. அந்த குறைந்த காற்றழுத்தம் நேற்று முன்தினம் காலை புயலாக மாறியது. 

இந்தப் புயலுக்கு ‘அசானி’ என பெயரிடப்பட்டுள்ளது.  அசானி புயலால் தமிழகத்திலும் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

.
மேலும்