வளர்ப்பில் உள்ள யானைகள் மீது அங்குசத்தை பயன்படுத்த தடை

By Senthil

வளர்ப்பில் உள்ள யானைகள் மீது அங்குசத்தை பயன்படுத்த தடை

கேரள மாநிலத்தின் கலாச்சாரத்தில் யானைகளின் பங்கு மிக முக்கியமாகும். கேரளாவில் எழுநூற்றுக்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கோயில்களுக்கும் தனிநபர்களுக்கும் சொந்தமானவை. அவை கோயில்களிலும் அதைச் சுற்றியுள்ள மத விழாக்களுக்கும், சில தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. 

மேலும் ஒரு சில யானைகள் மரம் வெட்டும் இடங்களில் வேலை செய்கின்றன. மாநில விலங்காக, யானை கேரள மாநில அரசின் சின்னத்தில் இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில், கேரள அரசு  நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், இனிமேல் வளர்ப்பில் உள்ள யானைகள் மீது அங்குசத்தை ( யானையை அடக்க பயன்படுத்தப்படும் கூர்மையான ஆயுதம் ) பயன்படுத்த கேரள அரசு தடை 

இந்த சட்டம் நேற்று முதல் கேரள மாநிலம் முழுவதும் அமுலுக்கு வந்தது

.
மேலும்