திமுக எத்தனை கணக்கு போட்டாலும் அது பலிக்காது - வி.கே.சசிகலா

By Senthil

அதிமுக உட்கட்சி பூசல் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றனர். அந்த வகையில்,  தஞ்சையில் நேற்று நடைபெற்ற சசிகலாவின் அண்ணன் திவாகரனின் கட்சி இணைப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சசிகலாவுக்கு மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அப்போது, பேசிய சசிகலா,  இன்று அண்ணா திராவிடர் கழகம் இணைந்துள்ளது. இதேபோல் பிரிந்து செயல்படும் அனைவரையும் ஒன்று சேர்த்து தமிழகத்தில் மிக பெரிய கட்சி நம் கட்சி என்று உருவாக்கும் வரை நான் ஓயமாட்டேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பயிற்சி பட்டறையில் படித்தவள் சொல்கிறேன், வீர தமிழச்சியாக சொல்கிறேன், நான் இருக்கின்றவரை அ.தி.மு.க.வை யாரும் அபகரிக்கவோ, அழித்துவிடவோ முடியாது. 

தி.மு.க. எத்தனை கணக்கு போட்டாலும் அது பலிக்காது. அதிமுக வரலாற்றிலேயே ஆண்டுக்கு ஒருமுறை, கழகத்தின் விதிகளை யாருமே மாற்றியது இல்லை. ஆனால், தற்போது நடப்பது பெரிய கேலிக்கூத்தாக உள்ளது. அனைவரையும் ஒன்றிணைத்து கழகத்தை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்வதுதான் என் எஞ்சிய வாழ்க்கை லட்சியம். 

2016 டிசம்பர் மாதம் வரை நடந்தது மட்டும்தான் உண்மையான பொதுக்குழு கூட்டங்கள்; அதன் பின்னர் நடந்தது எல்லாமே நிர்வாகிகள் கூட்டங்களாகவே கட்சி தொண்டர்கள் கருதுகின்றனர். நான் இருக்கும் வரை அ.தி.மு.க.வை அபகரிக்கவோ, அழிக்கவோ முடியாது. அதிமுகவின் பொதுச்செயலாளர் நான்தான்.அதிமுக பொதுக்குழு கூட்டம் சட்டப்படி செல்லாது என அந்த மேடையில் மேலும் தெரிவித்தார்.

https://www.dailythanthi.com/News/State/what-is-happening-now-is-a-great-travesty-as-long-as-i-am-there-admk-cannot-be-usurped-or-destroyed-sasikala-743638

.
மேலும்