டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சாம்பியன் ஆனது நியூஸிலாந்து - இந்தியா படுதோல்வி

By Ezhumalai

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், டெஸ்ட் போட்டிக்கென உலகக் கோப்பை போட்டி, முதன்முறையாக பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. முடிவில், இந்தியாவும் நியூஸிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. 

கடந்த 18ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில், இந்தியா முதல் இன்னிங்ஸில் 217 ரன் எடுத்து ஆல்-அவுட் ஆனது. நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 249 எடுத்து 32 ரன் முன்னிலை பெற்றது. இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா 170 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 

இரண்டு இன்னிங்ஸிலும் ஒரு இந்திய வீரர் கூட அரைசதம் எடுக்கவில்ல

139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்கத்தில் இந்தியாவுக்கு அஸ்வின் 2 விக்கெட்டுகளை எடுத்து நம்பிக்கை அளித்தார்.  ஆனால், நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ரோஸ் டெய்லர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, கடைசிவரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கான இலக்கை அடைந்தனர். 

இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 7 விக்கெட் வீழ்த்திய நியூஸிலாந்தின் கிலே ஜேமிசன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் சாம்பியன் அணி என்ற பெருமையை நியூஸிலாந்து அணி பெற்றது. 

இந்திய அணியின் சொதப்பல் ஆட்டத்தால் ஒரு வரலாற்று தோல்வியை இந்தியா பதிவுசெய்தது.

.
மேலும்