டிராவில் முடிந்த நியூஸிலாந்து vs இங்கிலாந்து முதல் டெஸ்ட்

By News Room

இங்கிலாந்தில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்தும் நியூஸிலாந்தும் மோதிக்கொண்டன.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 378 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டேவோன் கான்வே சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.  அவர் 200 ரன் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். பிறகு தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து. 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ரோரி பர்ன்ஸ் 132  ரன் எடுத்தார். 

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 169 ரன் எடுத்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. 273 ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கலோடு, விளையாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 270 ரன் எடுத்த நிலையில், ஆட்ட நேரம் முடிவடைந்ததால், முடிவு எட்டப்படாமல் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. 

முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் விளாசிய டேவோன் கான்வே ஆட்ட நாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்

இவ்விரு அணிகளுக்கிடையிலான 2 வது டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி பர்மிங்ஹாமில் தொடங்குகிறது. .

.
மேலும்