மெட்ரோ ரயில் பாதையில் தேய்மானம், சத்தத்தை குறைக்க புதிய எந்திரங்கள்

By Senthil

சென்னை மாநகரின் போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் இரு வழித்தடங்களில் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கப்படுகின்றன. இந்நிலையில் மெட்ரோ ரயில் பயணத்தின் போது ஏற்படும் சத்தத்தை குறைத்து மென்மையாக பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (சி.எம்.ஆர்.எல்.) ஈடுபட்டு உள்ளது. 

முதற்கட்டமாக விம்கோ நகர்- விமான நிலைய வழித்தடத்தில் தேய்மானத்தை குறைக்கவும், சத்தத்தை குறைக்கவும் தண்டவாளத்தில் கிரீஸ் தெளிக்கும் மசடு எந்திரங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. விம்கோ நகர் மற்றும் விமான நிலைய நடைபாதையில் இது போன்று 22 எந்திரங்களை வடிவமைத்து தயாரிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. 

எந்திரம் மூலம் தெளிக்கப்படும் இந்த கிரீசால் தேய்மானம் குறைந்து சத்தமும் குறையும். சி.எம்.ஆர்.எல். தண்ட வாளங்களை சீரமைக்க அமைக்கும் எந்திரத்தை பயன்படுத்தி அவ்வப்போது பராமரித்து வருகிறது.

.
மேலும்