நீட் விலக்கு மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மாளிகையில் ஒப்படைப்பு

By Senthil

தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வில் விலக்கு கோரி மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. அதனை ஆளுநர் ஆர்.என். ரவி, திரும்ப தமிழக அரசுக்கே அனுப்பிவைத்தார்.

இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 5-ஆம் தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில்  நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது. ஆளுநரால் நிராகரிக்கப்பட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 

.
மேலும்