விக்ரம் படத்தை பாராட்டிய பிரபலங்கள்

By Senthil

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் வெளியிட்ட  திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை  இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கான், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் வெற்றி  கொண்டாட்டடம் ஹைராபாத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் கமல்ஹாசனை தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வின்போது இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கான், விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது நீண்ட கால நண்பர் கமலின் விக்ரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்காக அவரை எனது இல்லத்திற்கு அழைத்து கவுரவப் படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்வின்போது எனது அன்பான சல்மான் கான் உடன் இருந்தது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. கமல் இதுபோன்ற வெற்றிகளை தொடர்ந்து குவிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

.
மேலும்