மருத்துவ படிப்பு: 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு கவர்னர் ஒப்புதல்

By saravanan

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவியருக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பான சட்ட மசோதாவை  சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேற்றியது.

தமிழக கவர்னரின் ஒப்புதலுக்காக சட்ட மசோதாவை அனுப்பி வைத்தது.  கவர்னரின் ஒப்புதல் கிடைக்காததால் மூத்த தமிழக அமைச்சர்கள்  கவர்னரை சந்தித்து வலியுறுத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் கவர்னரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவியர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார். 

மசோதாவுக்கு தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்க வாய்ப்பு உண்டு எனத் தெரிகிறது.

.
மேலும்