தமிழகத்தில் ஊடங்கு நீட்டிப்பு - சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து

By Ezhumalai

கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கை மேலும்
ஒருவார காலம் (ஜூன் 28ஆம் தேதி வரை) நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின்
உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு
பிரிவுகளுக்கும் தனித்தனியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

கொரோனா தாக்கம் அதிகமுள்ள நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர்,
நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற 11 மாவட்டங்கள் முதல்
பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. 

இராண்டாவது பிரிவில் 23 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் சில தளர்வுகள்
அளிக்கப்பட்டுள்ளன. இதில் சார்பதிவாளர்கள் அலுவலங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. 

மூன்றாவது பிரிவில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு - இந்த 4
மாவட்டங்களுக்கும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களுக்குள்
பொது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சினிமா, சின்னத்திரை ஷூட்டிங் நடத்த அனுமதிப்பட்டுள்ளது,

.
மேலும்