தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு

By Senthil

தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் முடிந்தது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்ட பின்னர், பிரசாரம் விறுவிறுப்படைந்தது. வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். அதிகாலை முதல் இரவு 10 மணி வரை இடைவிடாது மக்களை சந்தித்து ஓட்டு கேட்டனர். 

இன்று காலை முதல் இறுதிக்கட்ட பிரசாரம் அனல் பறந்தது. வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வீடு வீடாகச் சென்று  ஓட்டு சேகரித்தனர். தேர்தலுக்கு 48 மணிக்கு முன்பாக பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டபடி, இன்று மாலை 6 மணியுடன் தமிழகம் முழுவதும் பிரசாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது.. 

மேலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதையொட்டி இன்று முதல் 19ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுகுறிப்பாக, பணப்பட்டுவாடா மற்றும் விதிமீறல்களை தடுக்க கூடுதல் பறக்கும் படைகள் அமைத்து கண்கானிப்புகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

.
மேலும்