காணும் பொங்கல் - சுற்றுலா தளங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை

By Senthil

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் மூன்றாவது நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாட்டம் நடைபெறுவது வழக்கம். கொரோனா கட்டுப்பாடுகளை அடுத்து முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் இன்று காணும் பொங்கல் கொண்டாட்டம் இல்லை என தெரிவிக்கப் பட்டுள்ளது.  தடையை மீறி பொது இடங்களில், காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க, மாநிலம் முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 

கடற்கரை, பூங்கா மற்றும் பண்ணை வீடுகள் அதிகம் உள்ள இடங்கள், சுற்றுலா தலங்கள் இருக்கும் பகுதிகளில், 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

சென்னையில், 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், பொது மக்கள் வீடு மற்றும் விவசாய தோட்டங்களில் காணும் பொங்கலை கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

.
மேலும்