மே 28- ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

By News Room

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மே 28- ஆம் தேதி அன்று 43- வது ஜிஎஸ்டி கவுன்சில் (Goods and Services Tax Council) கூட்டம் நடக்கிறது. காணொளி மூலம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில, யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மாநில நிதியமைச்சர்கள் வலியுறுத்துவார்கள் என்று தகவல் கூறுகின்றன. அதேபோல், கொரோனா தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்டவைகளுக்கு ஜிஎஸ்டியை ரத்துச் செய்ய, மாநில நிதியமைச்சர்கள் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

.
மேலும்