தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு!

By SANTHOSH

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளும், சில மாநிலங்களில் சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் நாளை (02/05/2021) எண்ணப்பட்டு, நாளையே தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகளும், தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. நாளை (02/05/2021) காலை 08.00 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது.

கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் வாக்கு எண்ணிக்கையை நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

அதேபோல் தேர்தல் முடிவுகளை பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளும் வகையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் https://results.eci.gov.in/ என்ற இணைய தளத்தை அறிமுகம் செய்துள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணைய தளத்திற்கு சென்று மாநிலம் வாரியாக முன்னணி நிலவரங்கள் மற்றும் வெற்றி நிலவரங்களை அறிந்துக் கொள்ளலாம்.

.
மேலும்