எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு

By News Room

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ள அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை, அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.

இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவிவந்ததாக கூறப்படும் நிலையில், சுமார் 20 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பு  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பாலகங்கா ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு குறித்து பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக் கூறினர்.

இதற்கு முன், சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் உள்ள 9 மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை. ஆனால், அவர் சென்னையில்தான் தங்கியிருந்தார். இதுகுறித்து பேசிய, எடப்பாடி பழனிசாமி, தனக்கும் பன்னீர்செல்வத்துக்கும் எந்த கருத்துவேறும்பாடும் இல்லை என்றும், பன்னீர்செல்வத்தின் புதிய வீடு கிரஹபிரவேசம் இருந்ததால் அவரால் வரமுடியவில்லை என்றும் கூறினார்.

.
மேலும்