தொடங்கியது பூஸ்டர் டோஸ் வழங்கும் பணி

By Senthil

தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கி உள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் பூஸ்டர் தடுப்பூசி  முகாமை முதலமைச்சர் துவக்கிவைத்தார். அப்போது காவல்துறையினர் மற்றும் 60 வயதை கடந்த முதியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் போடப்பட்டன.

தமிழகத்தில் முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர் உள்பட முன்களப் பணியாளர்களுக்கு முதலில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதேபோல் 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும். முதல் தவணை மற்றும் 2-ம் தவணைகளில் எந்தவகை தடுப்பூசி செலுத்தப்பட்டதோ, அதே வகை தடுப்பூசியே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக வழங்கப்படும். 

.
மேலும்