வீட்டில் இருக்க வேண்டிய கருவிகள் என்னென்ன?

By News Room

இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளனர்.

மேலும், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும்; தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை மக்களுக்கு அரசு வழங்கியுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க மருத்துவ கருவிகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. வீட்டில் இருக்க வேண்டிய கருவிகள் என்னென்ன? என்பது குறித்து பார்ப்போம்!

பல்ஸ் ஆக்சிமீட்டர்:

ஒவ்வொரு வீட்டிலும் பல்ஸ் ஆக்சிமீட்டர் இருக்க வேண்டியது அவசியம்.

அறிகுறியடன் சோதனை முடிவுக்காகக் காத்திருப்போர் ஆக்சிஜன் அளவை இந்த கருவி மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

ஆக்சிஜன் அளவு 94- க்கு கீழ் சென்று விட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

கொரோனா நோயாளிகளுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்ற சிரமங்களோடு ரத்தத்தில் ஆக்சிஜன் குறைந்து மரணத்திற்கு வழிவகுக்கிறது. இந்த பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி மிக முக்கிமானது.

குறிப்பாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் அவசியம் பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவியை வைத்திருக்க வேண்டும்; அவ்வப்போது பரிசோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சானிடைசர்:

வீடு திரும்பியதும் கைகளை சுத்தம் செய்ய சானிடைசரைப் பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும் முக்கியமாக இருக்க வேண்டியது சானிடைசர்.

.
மேலும்