இலவசமாக கொரோனா தடுப்பூசி: மத்திய இணை அமைச்சர்

By nandha

இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் பாஜக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பீகார் தேர்தலில் வெற்றி பெற்றால்  அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.  கொரோனா தடுப்பூசியை தேர்தலில் வாக்கு சேகரிக்கும் கருவியாக பாஜக பயன்படுத்துவதாக பாஜகவுக்கு கண்டனங்களும் எழுந்தது.

இதுபோன்று தமிழ்நாடு, மத்திய பிரதேசம், அசாம், புதுச்சேரி மாநில அரசுகளும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளன.  

ஒடிசா மாநிலத்தின் பலசோரி தொகுதிக்கு வருகிற 3-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பாஜகவின் மத்திய இணை அமைச்சராக உள்ள பிரதாப் சாரங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த பிரசாரத்தின் போது கொரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதாப் சாரங்கியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,  

இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். இதனை பிரதமர் மோடி அறிவிப்பார். ஓர் நபருக்கு கொரோனா தடுப்பூசி போட சராசரியாக 500 ரூபாய் செலவிட வேண்டும் என்றார்.

.
மேலும்