‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’  என கிழக்கு கடற்கரை சாலை இனி அழைக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு

By Senthil

கிண்டியில் இன்று காலை  நெடுஞ்சாலைத் துறையின் பவள விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் கலந்துகொண்டு, நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நடைபெறும் கண்காட்சியை பார்வையிட்டார். அதன்பின்னர் நெடுஞ்சாலைத் துறையின் பவளவிழா நினைவுத் தூணை திறந்து வைத்தார். 

பின்னர், விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்தியாவில் நெடுஞ்சாலைத் துறைக்கு ஆராயச்சி நிறுவனம் அமைத்தது முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் என்றார்.

தரமான சாலைகளை அமைப்பதே தமிழக அரசின் இலக்கு, நாட்டிலேயே தரமான மேம்பாலமாக அண்ணா மேம்பாலம் திகழ்கிறது என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என அழைக்கப்படும் என்று அறிவித்தார்.

.
மேலும்