45-வது சென்னை புத்தக கண்காட்சி - முதலமைச்சர் தொடங்கிவைத்தார்

By Senthil

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று 45-வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர்  ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு அரங்குகளை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, இவ்விழாவில், 6 எழுத்தாளர்களுக்கு கருணாநிதி பொற்கிழி விருதை முதலமைச்சர் வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார்

மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சி நடத்த அரசு ஒத்துழைப்பு வழங்கும். மதுரையில் கருணாநிதி பெயரில் பிரமாண்ட நூலகம் அமைக்கப்படுகிறது. செம்மொழி தமிழின் சிறப்புகளை உலகமெங்கும் எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இப்போது ஆலயங்களிலும் தமிழ் ஒலிக்க தொடங்கி உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து, மாநில பாடலாக ஆக்கப்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்து 8 மாத காலத்தில் 7 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. 60க்கும் மேற்பட்ட நூலகங்களில் மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராவதற்காக ரூ.2.35 கோடியில் ஆங்கில இதழ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழின் அடையாளமாக திகழும் நுல்கள் திராவிட மற்றும் ஆங்கில மொழியில் மொழிமாற்றம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

.
மேலும்