டாஸ்மாக்கை திறக்கப்படுவதை எதிர்த்து பா.ஜ.க போராட்டம்

By Ezhumalai

கொரோனா ஊரடங்கு போடப்பட்டபோது டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில், கொரோனா தாக்கம் அதிகம் இல்லாத 27 மாவட்டங்களில் நாளைமுதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக ஸ்டாலின் அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பா.ஜ.க சார்பில் சென்னை தி.நகரில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர். கொரோனா பரவல் குறையாத நிலையில் டாஸ்மாக்கை திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை கைவிடக்கோரி பா.ஜ.க சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 

இதுகுறித்து பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், “தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம். மது ஆலைகளை மூடுவோம் என்று தேர்தல் நேரத்தில் கனிமொழி கூறினார். அ.தி.மு.க ஆட்சியில் ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகளை திறக்கவே கூடாது என்பது அவர்களின் நிலைப்பாடாக இருந்தது. தமிழ்நாடு அளவில் டாஸ்மாக்கை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதனால், இப்போது டாஸ்மாக் கடைகளை திறப்பதை எதிர்த்தும், அவர்களின் இரட்டை நிலைப்பாடை பொதுமக்களுக்கு எடுத்துச்சொல்லவும்தான் எங்களுடைய இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.” இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

.
மேலும்