இ- பதிவில் சந்தேகமா?- 1100-ல் தொடர்புக் கொள்ளலாம்!

By News Room

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும், மற்ற நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழகம் வருவோருக்கு இ- பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், மாவட்டங்களுக்கு உள்ளேயும் இ- பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ- பதிவிற்காக https://eregister.tnega.org/#/user/pass என்ற இணையதளத்தைப் பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது தமிழக அரசு.


இந்த நிலையில் இ- பதிவு முறை குறித்த சந்தேகங்கள், கேள்விகளுக்கு இலவச எண் 1100- ஐ தொடர்பு கொள்ளலாம். காலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இலவச எண் 1100- ஐ பொதுமக்கள் தொடர்புக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

.
மேலும்