டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு!

By News Room

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

குறிப்பாக, தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசும் அவ்வப்போது மாநில அரசுகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக, ஆக்சிஜன் விநியோகம், ரெம்டெசிவிர் மருந்து, கொரோனா தடுப்பூசி மருந்துகள் விநியோகம், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவைக் குறித்து அந்தந்த மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணை ஆளுநர்கள் மற்றும் உயர்மட்ட குழு அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், "டெல்லியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது வரும் மே 24- ஆம் தேதி காலை 05.00 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா தடுப்பூசித் தட்டுப்பாடு தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது" என்று டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.


டெல்லியில் நாளையுடன் ஊரடங்கு முடியவிருந்த நிலையில், அது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.
மேலும்