கோல்டன் விசா பெற்றார் நடிகை மீனா..!

By Senthil

இந்தியாவைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் உட்பட பிரபலங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாவை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த விசாவை கையில் வைத்திருப்பவர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரக குடிமகன்களாகக் கருதப்படுவார்கள். ஏற்கனவே பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்று இருக்கின்றனர்.

அதேபோல் தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், நடிகைகள் மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி இந்த விசாவை பெற்றுள்ளதும் குறிடத்தக்கது.

இந்நிலையில்,  நடிகை மீனாவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கோல்டன் விசாவை வழங்கி கௌரவித்துள்ளது. இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘இந்த கவுரவத்தை தந்ததற்கு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நன்றி. துபாய் எக்ஸ்போ 2020-ல் இந்த விசாவை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளேன்’ என்று மகிழ்ச்சியுடன் மீனா தெரிவித்துள்ளார்.

.
மேலும்