பெயர் ஜலதீபம்முதல் பாகம் ஆசிரியர் பெயர்: சாண்டில்யன்

By News Room

புத்தகத்தின் :பெயர் ஜலதீபம்முதல் பாகம்
ஆசிரியர் பெயர்: சாண்டில்யன்
பக்கங்கள் :363
வரலாற்றில் வரவு வைக்கப்பட்ட சில நினைவுகளின் நீட்சியை கற்பனையோடு படிக்கும் போது அது தரும் இன்பம் தான் எத்தகையது?...

ஆசிரியர் சாண்டில்யன் மகாராஷ்டிரர்களின் வாழ்க்கையைப் பின்னணியாக வைத்து தமிழ் மக்களுக்காக எழுதிய சரித்திர நாவல்தான் ஜலதீபம்.இது குமுதம் பத்திரிக்கையில் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் தொடர்கதையாக வந்தது.வாசகர்கள் பெரிதும் விரும்பிப் படித்த வராலாற்று நாவல்…

தந்திரங்களும் சூழ்ச்சிகளும் எதிர்காலத்தை கணிக்கும் திறன்களும் படிக்கும் போது ஏதோ மாயா ஜால படம் பார்ப்பது போல தோன்றியது.

நிர்மலா பெரியசாமியின் குங்குமம் இதழ் விளம்பரம் போன்று பக்கத்திற்கு பக்கம் சுவாரசியம்...படிக்க படிக்க விறுவிறுப்பு ...இருக்கிறது.

"முகலாயரையும் பிரிட்டிஷாரையும் போர்ச்சுகீசியரையும் கடல் பகுதியில் ஒடுக்கிய கனோஜி ஆங்கரே தமது கடைசி நாள் வரை அரபிக்கடலின் முடிசூடா மன்னராக விளங்கி வந்தார்" என்ற குறிப்பு என்னைப் பெரிதும் கவர்ந்தது.  உலகத்திலேயே பெரிய கடல் வல்லரசான பிரிட்டனையும்முறியடித்த ஒரு கடல் வீரன் நமது நாட்டிலிருந்திருக்கிறான் என்ற பெருமிதத்தின்  காரணமாக, ஒரு நாவலையே அந்த பெருமிதத்தின் வடிவில் உருவாக காரணமாய் அமைந்தது.

மகாராஷ்டிரா பேரரசை சிவாஜிக்கு அடுத்தபடி உருவாக்கி திடப்படுத்தி பாலாஜி விஷ்வநாத் கனோஜி ஆங்கரே பிரம்மேந்திர சுவாமி ஆகிய முப்பெரும் வரலாற்றுப் பாத்திரங்களை இப்புத்தகத்தில் சந்திக்கிறோம்.அதுமட்டுமன்றி மகாராஷ்டிரத்திற்க்கும் பிரிட்டிஷாருக்கும் பெரும் தொந்தரவு கொடுத்த 20 வயதுக்குள் மும்முறை விதவையாகிய காதரைன்  என்ற வரலாற்றுப் பாத்திரத்தையும் இந்த சிந்திப்போம். 
இந்தக்கதையின் கற்பனைப் பாத்திரங்களான இதயச்சந்திரன் மஞ்சு, பானு தேவி, எமிலி ,நிம்கர், தஞ்சை ரகசிய ராணி ஆகியவர்களின் கதாபாத்திரங்களை விரும்பும்படி உள்ளது.மஞ்சுவை நேசித்தது இதய சந்திரன் மட்டுமல்ல குமுதத்தை வாசித்தவர்கள் எல்லாம் நேசித்தார்கள். புத்தக வடிவில் படிக்கும் நாமும் ரசிக்கும்படி உள்ளது.

கடலில் சஞ்சரிக்கும் ஒரு மாலுமியின் ஆசாபாசங்களையும் கடமையை விட்டு வழுவாத ஒரு மாகாவீரனின் பேருணர்ச்சிகளையும் இக்கதை சித்தரிக்கிறது. தன்னை மீறிய சந்தர்ப்பங்களில் கர்மவீரர் இருப்பவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை இந்நாவலில் வலியுறுத்தியுள்ளார். பெரிய சரித்திர நிகழ்ச்சிகளை கொண்டு புனயப்பட்டுள்ள வரலாற்று நாவல். இந்த நாவலில் கடற்படை தலைவரின் அசுர சாதனைகள் கூடியவரை சொல்லப்பட்டுள்ளது.
 கடலில் பாரதத்தின் மானம் காத்த மாவீரன் அரபிக்கடலின் இணையற்ற அரசனாக விளங்கிய  வல்லரசு களையும் அண்டவிடாமல் காலாண்ட கடற் படைத்தளபதியின் வீரம் சொல்லப்பட்டுள்ளது.
முதல் அத்தியாயத்தில் கொங்கணியின் மடியில் கிடந்த இந்நாவலின் கதாநாயகனான இதயச்சந்திரனை  பிரம்மேந்திர சுவாமிகள் காப்பாற்றி அடைக்கலம் கொடுக்கிறார். அங்கு பானு தேவி இருக்கிறார் அவர் மகாராஷ்டிர மன்னர் சாகுவின் மருமகள். இணையற்ற வீரமும் எதற்கும் இணையாக கூறமுடியாத அளவுக்கும் பேரழகியும் நுட்பமான அறிவும் திறமையும் கொண்ட பானு தேவி  இதயச்சந்திரனின் மகாராஷ்டிரா வருகையின் காரணமறிந்து அவனை தன் அரசியலுக்கு  பயன்படுத்த விரும்புகிறார்.பானுதேவியின் மீது மையல் கொண்டு அவளின் செயலுக்கு இணங்கினாலும்,சரியான நேரத்தில் தடம் மாறி மஞ்சுவால் காப்பாற்றப்பட்டு கனோஜியுடன் இணைகிறார் தமிழன் இதயசந்திரன்.
ஆனால் விதியோ வலியது.இதயசந்திரன் பிருமேந்திர சுவாமிகளின் ஆணைப்படி கனோஜி ஆங்கரேவுடன் கடற்தளத்துக்கு சென்று மாலுமி ஆகிறான்.மஞ்சுவின் வீரம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
மஞ்சு மீது மையல் கொள்ளும் தமிழன்….அவள் மீது மையல் கொண்ட‌மானுவல் டி காஸ்ட்ரோவின் கோபத்தையும் வெறுப்பையும் எதிர்க்கொள்கிறான். இதயசந்திரன் வந்த நோக்கம் என்ன?கனோஜி ஆங்கரேயுடன் இணைந்த நோக்கம் தான் என்ன?மஞ்சு யாருக்கு?ஜலதீபத்தில் தளபதியானான தமிழன்?அடுத்த பாகத்தில் காண்போம்….

.
மேலும்