சில நேரங்களில் சில மனிதர்கள்.. எழுத்தாளர் ஜெயகந்தன்

By News Room

தெரிந்தோ தெரியாமலோ பாலியல் ரீதியான பாதிப்பிற்கு ஒரு பெண் உள்ளாகும்போது அந்த பெண்ணிற்கு மற்ற அனைத்தையும் விட முதல் தேவை தனது குடும்பத்தினரின் அரவணைப்பும் ஆதரவும்தான் அது கங்காவிற்கு கிடைக்கவில்லை மாறாக அவளையே குற்றவாளி ஆக்குகிறார்கள்  அதனால் அவள் தனது குடும்பத்தினர் மீது கோபம் கொள்கிறாள். 

கங்காவை ஒருவன் இருமுறை ஏமாற்றுகிறான் முதல் முறை வேண்டுமென்றே மறுமுறை அவள் நன்மைக்காக அவன் மீதும் அவள் கோபம் கொள்கிறாள். 

தன்னை போக பொருளாக பார்க்கும் தன் நடத்தையை , குணத்தை சந்தேகிக்கும் அவளது மாமாவின் மீதும் இந்த சமூகத்தின் மீதும் கோபம் கொள்கிறாள். 

இறுதியில் அத்தனை கோபங்களையும் காட்ட இந்த சமூகம் பெண்ணிற்கு என்று வகுத்து வைத்த விதிகளை, நடத்தைகளை தனது செயல்களின் மூலம் மீறுகிறாள். குடிக்கிறாள் , புகைகிறாள் , பல ஆண்களுடன் தவறாக பழகுகிறாள் கங்காவின் இந்த முடிவை ஏற்றுகொள்ள சற்று சிரமமாக இருக்கிறது. 

பொழுதுபோக்கு, பெண்கள், குடி , சூதாட்டம் என வாழ்க்கையின் பெரும் பகுதியை கழித்த பிரபு இறுதியில் வெறுமையை உணர்ந்து வாழ்க்கையை வெறுத்து மணிதனுக்கு இருக்க வேண்டிய லட்சியத்தின் முக்கியதுவத்தை உணர்ந்து நமக்கும் உணர்த்துகிறான். சிறு வயதில் அதிக பணத்தை கொடுப்பதால் எப்படி சிறுவர்கள் கெடுகிறார்கள் என்பதும் பிரபு உணர்த்தும் வாழ்க்கை பாடம். 

தன் குழந்தைகளின் நலனுக்காக உறுதியாக நிற்கும் பத்மாவும் , உண்மை மற்றும் நேர்மையின் அவசியத்தை புரியவைக்கும் மஞ்சுவும் சிறப்பு 

1970 களிலேயே sexual harassment, dating, living together , பெண்கள் புகைப்பது , மது அருந்துவது என கதையை அமைத்திருக்கிறார் ஜெயகாந்தன் அவர்கள் . பிரபலமான, சாகத்திய விருது வென்ற நாவலான இது ஒரு அருமையான படைப்பு.

.
மேலும்