இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?'

By News Room

தோழர் ப. திருமாவேலன் எழுதிய, 'இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?' நூலை இன்று பொங்கலன்று படித்து முடித்தேன். இந்நூல் குறித்து ஒரு மதிப்புரை எழுதினால், அதுவே ஒரு நூலாக விரிந்துவிடலாம். எனவே, மற்றவர்கள்  உடனே நூலை படிக்க வேண்டிய அவசியம் கருதியே இந்தச் சிறுகுறிப்பு.

பெரியார் மீது ஒருவர் விமர்சனம் வைப்பதில் தவறு ஏதும் கிடையாது. ஒருவரின் கருத்தியல் அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், அவதூறுகளுக்கு அந்தப் பண்பில்லை. எதிரிகள் அவ்வாறு அவதூறு சுமத்துவது இயல்பே. ஆனால், பெரியார் யாருக்காக உழைத்தாரோ அதில் ஒரு சிறு பிரிவினர் அவர் மீது தொடர்ந்து வன்மம் கக்கும் அவதூறுகளைப் பொழிந்தபடியே இருப்பதைக் காண்கிறோம். சமயத்தில் ஓரளவு அறிவுத் தெளிவுள்ளவர்கள்கூட அவை உண்மையோ என்று மயங்கும்படி அந்த அவதூறுகளின் தன்மைகள் இருந்தன. அந்த மயக்கத்தைத் தீர்க்கும் மருந்தாக வந்திருப்பதே இந்நூல். 

இந்நூல் ஒரு புதிய விவாதத்தைத் தொடங்கி வைக்கலாம். குறிப்பாக, பெரியார் குறித்து எதிர்மறைக் கருத்துள்ளவர்கள் இதை செய்ய முனையலாம். ஆனால், நூலைப் படித்து முடிக்கும்போது அக்கருத்து மறைந்திருக்கும் என்பது உறுதி. அவ்வளவு தெளிவாகத் தரவுகளை முன்வைத்திருக்கிறார் தோழர் Thirumavelan Padikaramu . அவருடைய இருபதாண்டு உழைப்பு நூலில் வெளிப்படையாகவே தெரிகிறது. 

வழக்கம்போல எதையும் படிக்காமல் அவதூறுகளை அள்ளிவீசுபவர்களுக்கு இந்நூல் ஒரு பொருட்டல்ல.  ஏனெனில், அவதூறு ஒரு வியாதி. ஆனால், அத்தகைய அவதூறுகளையும்  பொய்களையும் பொதுவெளியில் அம்பலப்படுத்த  விரும்புபவர்களுக்கு இந்நூல் ஒரு களஞ்சியம். எனவே, உண்மையை உணர விரும்பும் அல்லது பிறருக்கு உணர்த்த விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய தொகுப்பு நூலாக இதைப் பரிந்துரைக்கிறேன்.

.
மேலும்