புத்தகம்: இரவு ஆசிரியர்: ஜெயமோகன்

By News Room

புத்தகம்: இரவு
ஆசிரியர்: ஜெயமோகன்
பக்கங்கள்: 240

இரவு என்பதற்கு இப்படி ஒரு விளக்கம் இருக்கும்.... இதற்கு இப்படி ஒரு முகம் இருக்கும் என கண்டிப்பாக இந்த நாவலை படிக்கும் வரை எனக்கு எண்ணம் இல்லை.....

தமிழும்..... மலையாளமும் கலந்து.... கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மற்றும் காயலை சுற்றியே கதை பயணிக்கிறது....

சென்னையில் இருந்து  எர்ணாகுளம் வருகிறார் ஒரு ஆடிட்டர்.... அவர் பெயரே 3வது அத்தியாயத்தில் தான் சொல்கிறார்கள்.... 

அவர் தங்கும் வீடு... வீட்டை சுற்றிலும் இருக்கும் தென்னை மரங்கள்.... அமைதியான சூழ்நிலை எல்லாம் புது அனுபவமாக இருக்கிறது...

அதிலும் அந்த வீட்டில் இருந்து சற்று தள்ளி இருக்கும் வீட்டில் இருக்கும் மனிதர்களின் விசித்திர போக்கும்... அதைப் பற்றிய சரியான விவரங்களும் கிடைக்காமல் போனதில் இயல்பாக எழும் ஆர்வம் இவருக்கும்....

அந்த ஆர்வம் தான்.. வேண்டாம் என உள்மனம் எச்சரித்தும் அங்கு போகிறார்... அதோடு அவரின் வாழ்வில் நடக்கும் அசாரதரான நிகழ்வுகள்.... அதிலிருந்து மீள முடியும் அளவு மன உறுதி அவருக்கு இருந்ததா என்பதை அறிந்து கொள்ள படிக்கும் ஒவ்வொரு நொடியும் திக் திக் நிமிடங்கள் தான்...

பகலை வெறுத்து இரவில் மட்டுமே உலகம் இருப்பதாக வாழும் ஒரு சமூகம்... அவர்களின் கருத்துகளும்... விவாதங்களும் ஒரே கருத்தையே தீவிரமாக வலியுறுத்துகிறது.....

கடவுள் வாழ்வதற்கு படைத்த சிறப்பான நேரம் இரவு தான்....
இயற்கையும்..... மிருகங்களும்.... அந்த நேரத்தில் தான் விழிப்புடன் இருக்கிறது... 
மனிதனின் வாழ்வின் மகிழ்ச்சி இரவில் தான் இருக்கிறது...
அன்பையும்.... கோபத்தையும்.... வெறுப்பையும்.... உணர்ச்சியையும் ஒரு மனிதன் உச்சகட்டத்தில் வெளிப்படுத்துவது இரவில் தான் என உறுதியாக நம்புகிறார்கள்.....

பகலை ஏதோ ஒரு காரணத்திற்காக வெறுக்கும் நிறைய பேர் அதில் இணைகிறார்கள்....
பகல் முழுதும் உறக்கத்தில் கழித்துவிட்டு  இரவில் ஒன்று கூடுகிறார்கள்...

தெரியாமல் அந்த கூட்டத்தில் மாட்டிக் கொள்ளும் சரவணன்.... அதில் இருந்து மீள நினைத்தாலும் அந்த பெண்.... நீலிமா அதை நிறைவற்ற தடையாக அவளின் மேல் ஒருவித ஈர்ப்பு.... காதல் வயப்படுகிறான்....

தன் இயல்பை தொலைத்து.... வந்த வேலையை மறந்து அந்த குழுவுடன் இணைந்து விடுகிறான்.... அவர்கள் கருத்தை ஏற்காமல் போனாலும் அதிலிருந்து வெளிவர விடாமல் இழுக்கும் காந்த சக்தியாக நீலிமா...

எதிர்பாராமல் நடக்கும் நிகழ்வுகளும்... கொலைகளும்.....எதுவும் வேண்டாம் என அனைத்து மாயைகளையும் உடைத்துக் கொண்டு வெளி கொண்டு வருகிறது.....

விட்டால் போதும் என எர்ணாகுளத்தை விட்டே சென்னைக்கு திரும்பி விடுகிறான் சரவணன்...

சரவணன் தப்பி விடுவானா....?
இல்லையா...?
என ஒருவித இறுக்கத்துடன் கதையை படித்த அனைவருக்கும் அவன் சென்னைக்கு கிளம்பி விட்டான் என்பது பெரும் ஆறுதலைத் தான் கொடுத்து இருக்கும் என்னை போலவே..
அப்பப்படா என பெருமூச்சு விட்டு இருப்பார்கள்....

ஆனால் இறுதியில்.... 
க்ளைமேக்ஸ்....
எதிர்பாராத ஒரு முடிவு தான் எனக்கு.....
எனக்கு தான் எதிர்பாராத முடிவா.... 
படித்த மற்றவர்கள் இதை எதிர்பார்த்து இருப்பார்களா என புரியாத கேள்விகளுடன் கதையை முடித்தேன்..

கொலையுதிர் காலம் எல்லாம் எம்மாத்திரம் என இருந்தது இந்த நாவலை படித்து முடித்ததும்....

மன உறுதி சற்று குறைவாக இருப்பவர்களுக்கு இந்த நாவலை படித்து முடித்ததும் அன்றைய இரவு நிம்மதியான உறக்கம் என்பது சந்தேகம் தான்...

முதல் முறை ஜெயமோகன் நாவல் வாசிக்கிறேன்.... இது தான் இப்படியா... இல்லை அனைத்து படைப்புகளும் மிரட்டும் படியாகத் தான் இருக்குமா என அவரின் நாவல்கள் படித்தவர்கள் சொல்லவும்....

மொத்தத்தில் பயங்கரமான ஒரு நாவல் தான்.... இரவு என்றால் இனி இந்த நாவல் தான் எனக்கு முதலில் நினைவுக்கு வரும்....

.
மேலும்