புத்தகம் : மலைப்பூ - ஆசிரியர் : விழியன்

By News Room

பெயர் : ரியா ரோஷன்
வகுப்பு: ஏழாம்  வகுப்பு
வயது :12
இடம்: சென்னை
புத்தகம் : மலைப்பூ 
ஆசிரியர் : விழியன் 
பதிப்பகம் : புக்ஸ் ஃபார் சில்ட்ரன்  
விலை: Rs.95

•மலைப்பூ - புத்தகத்தை பற்றி :-

இந்த புத்தகம் எனக்கு வாசிப்பை நேசிப்போம் கி.ரா தாத்தா நினைவு போட்டியில் 'பிஞ்சுகள்' பற்றி எழுதியதற்கு பரிசாக கிடைத்தது. மலைப்பூ மிகவும் அற்புதமான புத்தகம். மலைப்பூ யார் தெரியுமா? லட்சுமி அப்படிங்கிற குட்டிப்பொண்ணு.
அவளுக்கும் என் வயது தான்.
அவளும் ஏழாம் வகுப்பு படிக்கிறாள்.

•மலைப்பூ - கதை :-

இந்த கதையின் ஹீரோயின் லட்சுமி தான். அவளுக்கு இரண்டு நண்பர்கள் இருப்பார்கள். (கோமதி மற்றும் தேவகி) டீச்சர் முத்துக்குமாரி இவர்களை ஒரு தேசிய அறிவியல் போட்டியில் பங்கு பெற வைப்பார். இவர்கள் எல்லோரும் சேர்ந்து பனைமரத்தை பற்றி ஆராய்ச்சி செய்வார்கள். State level இல் வெற்றி பெற்றுவிடுவார்கள். சென்னைக்கு பயணம் செய்வார்கள். ஆனால் அங்கிருந்து national level இற்கு காசிக்கு பயணம் செய்யவேண்டிவரும். தேசிய போட்டியில் ஒரு team இல் ஒரு நபர் தான் பங்கு பெற முடியும். லட்சுமி தான் அந்த நபர். அவளோட காசி பயணம் தான் இந்த கதையே.

* மலைப்பூ -ஆசிரியர் :-

இந்த புத்தகத்தை எழுதியவர் விழியன் அவர்கள். அவர் இந்த கதையில் ஒரு கதாபாத்திரமாக வருவார்.இந்தப் புத்தகம் படிப்பதற்கு மிகவும் எளிமையாக இருந்தது.எல்லாமே குட்டி குட்டி chapters.அழகான ஓவியங்கள் இருந்தது.புத்தகத்தின் பின்னுரையில் நிறைய நல்ல information இருந்தது.

•இந்த புத்தகத்தில் என்னை கவர்ந்த விஷயங்கள் :-

* லட்சுமி-கோமதி நட்பு
ஒரு சனிக்கிழமை பள்ளிக்கு லட்சுமி uniform போட்டு கொண்டு வருவாள். அப்போது கோமதி அவளிடம் இன்னைக்கும் uniform போட்டுக்கொண்டுதான் வரணுமா என்று கேட்டு விடுவாள். அதற்கு லட்சுமி " என்கிட்ட இருக்கிற மூன்று நல்ல உடைகள் ல இரண்டு பள்ளி கொடுத்ததுதான்". என்று சொல்லிவிடுவாள். அதற்கப்பறம் லட்சுமி காசிக்கு பயணம் செய்யும்போது அவளுக்கு கோமதி ஒரு பை நிறைய புது துணி தன் தந்தையிடம் சொல்லி வாங்கி தருவாள். இந்த நட்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

*Climax scene
காசி தேசிய போட்டியில் stage இல் நின்று பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கு லட்சுமியின் பெயரை அவளின் தோழி ராணி எழுதி விடுவாள். அப்போது லட்சுமி கேட்கும் இரண்டு கேள்விகள் மிகவும் அற்புதமாக இருந்தது.

* Project
இவங்க project பெயர் 'பனை மரங்கள் - சுற்றுச்சூழலும் பொருளாதாரமும்'. பனை மரத்தில் கூட Project ஆ என்று ஆச்சரியமாக இருந்தது. நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.

* ஏலகிரி trip
சமீபத்தில் நான் ஏலகிரிமலைக்கு சுற்றுலா சென்றேன். அங்கு ஐந்து மணிக்கெல்லாம் இருட்டி விடுகிறது. அங்கு இருக்கும் பள்ளி, வீடுகள், hostel எல்லாம் பார்த்துவிட்டு வந்தேன். அதனால் இந்த புத்தகத்தை அதனுடன் relate செய்து படித்தேன். இன்னும் சுவாரசியமாக இருந்தது.

நன்றி
ரியா ரோஷன்

.
மேலும்