’அவயம்’ - ஏக்நாத்

By News Room

சில வருடங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய நாவல். இப்போதுதான் வாய்த்திருக்கிறது.  இளைஞன் ஒருவன்,தன் பலவீனங்களால் வாழ்வில் சந்திக்கிற அவமானங்களும் இழப்புகளும் போராட்டங்களும்தான் ’அவயம்’. அவன் நடக்கிற பாதையில், கிடக்கிற குளங்களில் நிலவுகள் அவனோடு நீந்திக் கொண்டே இருக்கின்றன. அவன் ரசிக்கிறான். உரையாடுகிறான். மயங்குகிறான். இரு கை கொண்டு அதை ரகசியமாகத் தூக்கி ஓட நினைக்கும் போது சறுக்குகிறான். மீள்கிற அவன் என்ன செய்கிறான் என்பதை, நான் நினைக்கிறபடி இந்த நாவல் பேசலாம். அல்லது நீங்கள் நினைக்கும்படியும் பேசலாம். அப்படி ஏதுமின்றி வேறொன்றாகவும் இருக்கலாம் ! என் முந்தைய நாவல்களைப் போலவே சிறு கிராம பின்னணியில் எழுதப்பட்டதுதான் இதுவும். சில அரசியல் நிகழ்வுகளும் இருக்கின்றன. ஆனால், எந்த புரட்சியையும் அதிர்ச்சியையும் பேசவில்லை. 

சிறப்பான அட்டைப்படம் வடிவமைத்த ஆசான் P R Rajan க்கு நன்றி.
 
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
288 பக்கங்கள்.
விலை. ரூ.320

.
மேலும்