கொத்தமல்லி ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படும் நம்மைகள்?

By News Room

அன்றாட உணவில் சேர்க்கப்படும் ஓர் மருத்துவ குணம் நிறைந்த மூலிகை தான் கொத்தமல்லி. கொத்தமல்லி உணவிற்கு மணத்தையும், சுவையையும் தருவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் ஏராளமான நன்மைகளை வாரி வழங்கும். மேலும் இது எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று என்பதால், இதனை சமையலில் சேர்ப்பதோடு, தினமும் ஜூஸ் தயாரித்து சிறிது குடித்து வந்தால், பல பிரச்சனைகளைப் போக்கலாம்.

கொத்தமல்லியில் 11 அத்தியாவசிய எண்ணெய்களும், 6 வகையான அமிலங்களும், கனிமச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளது. இங்கு கொத்தமல்லியைக் கொண்டு எப்படி ஜூஸ் தயாரிப்பது என்றும், அதனைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஜூஸ் தயாரிக்கும் முறை: 

கொத்தமல்லியை நீரில் நன்கு கழுவி, சிறிதாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் அதனைப் போட்டு , சிறு துண்டு இஞ்சி + ஒரு டி ஸ்பூன் சீரகம் சேர்த்து அதனுடன் 1 1/2 கப் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்த பின் வடிகட்டி சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால், கொத்தமல்லி ஜூஸ் ரெடி!

சரும நன்மைகள் :

கொத்தமல்லி ஜூஸ் சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. குறிப்பாக இது எக்ஸிமா, வறட்சி மற்றும் பூஞ்சை நோய்கள் போன்ற பல சரும பிரச்சனைகளைத் தடுக்கும். மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், பல தீவிர சரும பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவும்.

இதய நன்மைகள் :

கொத்தமல்லியில் உள்ள ஏராளமான அத்தியாவசிய எணணெய்கள், கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவும். இதனால் இதயத்தின் செயல்பாடு மேம்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறையும்.

இரத்த சோகை :

இரத்த சோகை இருப்பவர்கள் கொத்தமல்லி ஜூஸ் குடிப்பது நல்லது. ஏனெனில் இதில் ஹீமோகுளோபின் உற்பத்திக்குத் தேவையான இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

இரத்த அழுத்த பிரச்சனை :

கொத்தமல்லியில் கனிமச்சத்துக்களான மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்றவை அதிகமாகவும், சோடியம் குறைவான அளவிலும் உள்ளது. ஆகவே இதன் ஜூஸை ஒருவர் தினமும் சிறிது குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் :

கொத்தமல்லியில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், மற்ற மூலக்கூறுகள் ஆக்ஸிஜனேற்றமடைவதைத் தடுத்து, பல்வேறு நோய்களின் தாக்கத்தையும் தடுக்கும். முக்கியமாக இந்த ஜூஸ் அல்சைமர் நோயைத் தடுப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரைப்பை குடல் நன்மைகள் :

கொத்தமல்லி ஜூஸ் செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரித்து, செரிமானத்தை மேம்படுத்தும். அஜீரண பிரச்சனையால் அடிக்கடி அவஸ்தைப்படுபவர்கள் இந்த ஜூஸை தினமும் சிறிது குடித்தால், அதில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

வலிமையான எலும்புகள் :

கொத்தமல்லியில் உள்ள கால்சியம், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. இது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களான ஆஸ்டியோபோராசிஸ் மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கும்.

வாய் ஆரோக்கியம் :

கொத்தமல்லி ஜூஸை தினமும் சிறிது குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-செப்டிக் பண்புகள், வாய்ப்புண்ணை சரிசெய்ய உதவும். மேலும் இதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், வாயை சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும்.

எடை குறைவு :

எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் காலையில் சிறிது கொத்தமல்லி ஜூஸைக் குடித்தால், அடிக்கடி வரும் பசி உணர்வைத் தடுத்து, உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும்

ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் :

கொத்தமல்லியில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை தடுத்து, சீராக பராமரிக்க உதவும். மேலும் பெண்கள் இதை தினமும் சிறிது குடித்து வந்தால், மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

.
மேலும்