தொடங்கும் கோடைகாலம், மக்கள் தேடும் தர்பூசணி

By Senthil

கோடை வெயில் தொடங்கிவிட்டது. சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளும் மக்கள் வீதிகளின் ஓரத்தில் கடை விரித்திருக்கும் தர்பூசணி கடைகளின் மேல் பார்வை செல்லும் அத்தகைய தர்பூசணி பழத்தின் சிறப்பு என்ன, அதனை உட்கொள்வதால் ஏற்படும் பயன்கள் என்ன ?  மேலும், வெயில் காலங்களில் நமது உடலில் நீர்சத்து இருப்பதும், உடல் குளிர்ந்த நிலையில் இருப்பதும் அவசியம். இவற்றை பெற நமக்கு பல இயற்கை உணவுகள் உதவுகின்றன. அதில் ஒன்று தான் “தர்பூசணி” பழம். இதோ அதன் சிறப்பை பார்ப்போம் வாங்க...

கோடைகாலங்களில் உடலின் நீர் வியர்வையாக வெளியேறிவிடுவதால் ரத்தத்தில் நீர்சத்து குறைந்து ரத்த ஓட்டம் வேகம் குறைகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் ரத்தத்தில் நீர் சத்து சேர்ந்து, ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. - Advertisement - உடல் குளிர்ச்சி கோடைகாலங்களில் வெப்பம் அதிகரிப்பது, அனல் கற்று வீசுவதால் உடலில் இருகின்ற நீர் சத்துகள் வெளியேறி, உடல் சுலபத்தில் வெப்பமடைகிறது.

இதனால் நமக்கு சீக்கிரத்தில் சோர்வு உண்டாகிறது. கோடைகாலங்களில் கிடைக்கின்ற சமயங்களில் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைந்து, உடற்சோர்வை நீக்குகிறது. மலச்சிக்கல் நார்ச்சத்து குறைந்த உணவுகளையும், மாவுச்சத்து மிகுந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிடுவதால் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகிறது. வயிற்றில் நீர்சத்து குறைவதாலும் மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கிறது. தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர் சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை தீருகிறது. ஊட்டச்சத்து நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இவை அனைத்தும் அவ்வப்போது நாம் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கின்றன.

ஆண்மை குறைபாடுகள் நரம்புகள் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதில் சில இளம் மற்றும் நடுத்தர வயது ஆண்கள் சிலருக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது. தர்பூசணி பழத்தில் சிட்ருலின் சத்து அதிகம் உள்ளது. இது தர்பூசணி பழத்தில் வெள்ளையாக இருக்கும் பகுதியில் அதிகம் உள்ளது. எனவே பழத்தை சாப்பிடுவதோடு இந்த வெள்ளை பகுதியை சாப்பிடுவதால் ஆண்மை குறைபாடுகளை போக்க முடியும்.

இளமை தோற்றம் வயது முதிர்ச்சி அடையும் போது ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் தோல் கடின தன்மை பெறுவதோடு, தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது, ஈரப்பதம் குறைவது போன்றவை ஏற்பட்டு முதுமையான தோற்றம் பெற செய்கிறது. இவர்கள் தர்பூசணி பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உங்களின் தோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி பளபளப்பை அதிகரித்து, சுருக்கங்களை போக்கி, இளமை தோற்றத்தை நீடிக்க செய்கிறது. கோடைகாலங்களில் கிடைக்கின்ற சமயங்களில் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைந்து, உடற்சோர்வை நீக்குகிறது. 

.
மேலும்