உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் நடைப்பயிற்சி

By Senthil

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. உடற்பயிற்சி மீது நாட்டம் கொண்டவர்களிலும் நடைப்பயிற்சிதான் நிறைய பேரின் விருப்ப தேர்வாக அமைந்திருக்கிறது. அதுதான் உடலை வலுப்படுத்தும் எளிமையான பயிற்சியாகவும் அமைந்திருக்கிறது.

நடைப்பயிற்சி போன்ற எளிதான உடற்பயிற்சி செய்வது, உங்கள் உடலை சுறுசுறுப்பாகவும் மற்றும் உங்கள் எடையை நிர்வாகிக்கவும் உதவும் மேலும் உடல் பருமனாவதையும் தடுக்கும்.

நடைப்பயிற்சி ஒரு இதய பயிற்சியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உடற்பயிற்சிகள் இதயத்திற்கு மிகவும் நல்லது என்று நம்புகிறார்கள். அதனால், தினசரி 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது இதய நோயின் அபாயத்தை குறைக்கும்.

வெறுமனே நடந்தபடி பயிற்சி மேற்கொள்ளாமல் இடையிடையே வேறு சில எளிய பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். தடை தாண்டும் போட்டிக்கான கட்டமைப்பு போல் சில அடி உயரத்திற்கு வரிசையாக தடுப்பு பலகைகளை அமைத்து கால்களால் தாண்டி பயிற்சி பெறலாம்.

இந்த நடைபயிற்ச்சிக்கு நாம் ஒரு நாளுக்கு குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் செலவிட முயற்சி எடுத்து நடைப்பயிற்சி செய்யுங்கள். அது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மற்றும் நல்வாழ்விற்கும் மிகவும் நன்மை தரும்!

.
மேலும்