சுவையான கருப்பு உளுந்து களி...!

By Senthil

செய்முறை :-
கருப்பு உளுந்து 1டம்ளர் க்கு 2 ஸ்பூன் அரிசி வீதம் வறுத்து அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.. 1டம்ளர் உளுந்து க்கு 2 டம்ளர் அளவில் குண்டு வெல்லம் காய்ச்சி வடித்து வைக்க வேண்டும்...
1டம்ளர் உளுந்து க்கு 2 டம்ளர் தண்ணீரில் கரைத்து கொள்ளவும், அதே போல் 2 டம்ளர் தண்ணீரை சூடு செய்து கரைத்த உளுந்தை நன்றாக களர  வேண்டும் (கட்டி யாக விட கூடாது).. Bubbles வரும்போது வடிகட்டிய பாகு சேர்த்து மீண்டும் களர வேண்டும்.. மீண்டும் bubbles வரும்போது நல்லெண்ணெய் சேர்த்து ஏலக்காய் சேர்க்கவும்.. பதம் தெரியும் வரை களர வேண்டும்.....

சுவையான களி ரெடி....

இந்த கருப்பு உளுந்து களி சுவை மட்டுமல்லாமல் எலும்பு மற்றும் உடலுக்கு பல விதங்களில் அதிக பலம் கொண்டது குறிப்பாக பெண்கள் பூப்படையும் சமயத்தில் இதை நல்லெண்ணெயில் செய்து உட்கொள்வது மிகச்சிறப்பு வாய்ந்தது, எலும்புக்கும், கருப்பைக்கு உறுதியளிக்க வல்லது கருப்பட்டியில் செய்வதால் இரும்புசத்து மிகுந்து ரத்தப்போக்கை சீர்செய்யவல்லது. பெண்களுக்கு மிகவும் ஏற்றது.

.
மேலும்