நெல்லிக்காயின் மகத்துவம்

By News Room

பச்சை நெல்லிக்காயை இடித்து பத்து மில்லிக்கு குறையாமல் சாறு பிழிந்து
இதனோடு இதில் பாதி அளவு 
எலுமிச்சை சாறு இதனுடன் கலந்து

எலுமிச்சை சாற்றின் அளவில் பாதியளவு தேன் கலந்து இதை தினந்தோறும் காலை வேலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு மாதம் பருகி வந்தால் எந்த வைத்திய முறைக்கும் கட்டுப்படாத நாட்பட்ட சர்க்கரை நோயானது வெகு எளிதாக கட்டுப்படும்

இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இந்த நெல்லிக்காய் சாற்றினை பருகி வர சர்க்கரையின் அளவு எப்போதும் சமநிலையில் இருக்கும்

     நெல்லிக்காய் சாற்றினை பருகி வருவதால் கிடைக்கின்ற பயன்கள்

உடல் வெட்டைச்சூடு தணியும் 
நல்ல ரத்தம் உற்பத்தியாகும் 
விந்து ஸ்கலிதம் குணமாகும் 
விந்து உற்பத்தி அதிகரிக்கும் 

பார்வைத் திறன் உண்டாகும்
மனதில் ஏற்படும் பயம் விலகும் மனோதிடம் ஏற்படும்

உடல் வறட்சியை நீக்கி உடல் வெப்பத்தை தணிக்கும் அதிக தாகம் குணமாகும்

பித்த வாந்தி மற்றும் ரத்த வாந்தி நிவர்த்தியாகும் தலை மயக்கம் நீங்கும்

நுரையீரலுக்கு வலிமை ஏற்படும் கல்லீரல் மற்றும் மண்ணீரல் பலம் பெறும் ரத்தம் சுத்தமாகும் மேலும் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் இதன் மூலம் சுவாச மண்டலம் சீராக இயங்கும்

எந்தவிதமான நோய்க்கிருமிகளும் சுவாசப் பாதையில் தொற்றாத வண்ணம் நமது உடலை காக்கும் 

உடல் பிணிகள் அனைத்தையும் நீக்கி உடலில் நோய் வராமல் காக்கும்
ஒரு உன்னத மருத்துவம் இது

பச்சை நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் இருந்பது கிராம் நெல்லி வற்றலை இடித்து இருநூறு மில்லி தண்ணீரில் கலந்து இதை ஐம்பது மில்லியாக சுண்டக் காய்ச்சி இதில் பத்து மில்லி எலுமிச்சை சாறும் ஒரு ஸ்பூன் தேனும் கலந்து பருகி வந்தால் மேலே சொன்ன அனைத்து நோய்களும் நீங்கும் உடலில் எப்போதும் ஆரோக்கியம் நீடிக்கும்.

.
மேலும்