உடல் ஆரோக்கியத்தை காக்கும் பழைய சோற்று..!

By Senthil

60, 70, 80 வயதைக் கடந்த பிறகும், உடல் ஆரோக்கியமாக இருக்கும் நமது முன்னோர்கள். இதனை குறித்து அவர்களிடம் கேட்டு பாருங்கள். இதற்கு அவர்கள் நாங்கள் அந்தக் காலத்தில் காலை- மதியம் என இரு வேளையும் பழைய சோற்றினை தான் உணவாக உட்கொண்டோம் என்று சொல்வார்கள். 

தற்போதைய இளைய தலைமுறைக்கு, பீட்சா, பர்கரிலேயே காலம் தள்ளிக்கொண்டிருக்கும் இளைய பட்டாளத்துக்காகவாவது இதைச் சொல்லித்தான் ஆகவேண்டியிருக்கிறது. பழைய சோறு கிடக்கட்டும்... சோற்றை ஊறவைத்திருக்கும் தண்ணீர் அத்தனை ருசியானது; எத்தனையோ மருத்துவக் குணங்களைக்கொண்டது. 

இத்தகைய சிறப்பு வாழ்ந்த பழைய சோற்றின் நன்மைகள்... 

ரத்த அழுத்தம் சீராகும்; உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியச்செய்யும். முழு நாளைக்கும் நம்மை ஃப்ரெஷ்ஷாக உணரவைக்கும். உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இதில் இருக்கின்றன. 

காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும். இந்த உணவு, நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும்; உடல் சோர்வை விரட்டும். 

ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும். எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதம். புதிய நோய்த் தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும். வனப்பைத் தரும்; இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவும். 

.
மேலும்