சுவையான முட்டை குருமா

By Senthil

தேவையான பொருட்கள் :

முட்டை - 6
இஞ்சி, பூண்டு விழுது - கொஞ்சம்
தக்காளி - 1
பெ.வெங்காயம் - 1  
பச்சை மிளகாய் - 4
சோம்பு, கிராம்பு, கசகசா - சிறிதளவு
தேங்காய் துருவல் - கால் கப்
மஞ்சள் தூள், மிளகாய் தூள் - சிறிதளவு
சாம்பார் பொடி - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ப


செய்முறை :

முதலில் முட்டையை வேக வைத்துக்கொள்ளுங்கள். பின்பு, தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மேலும், சோம்பு, கிராம்பு , கசகசா, தேங்காய் துருவல் போன்றவற்றை மிக்சியில் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர், அடுப்பை ஏற்றி வாணலி வைத்து, அது சூடு ஏறியதும் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், சாம்பார்பொடி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள்.

நன்கு கொதிக்க தொடங்கியதும் வேகவைத்த முட்டைகளை துண்டுகளாக நறுக்கி போட்டு உடையாத அளவுக்கு லேசாக கிளறிவிடுங்கள்.

அதனுடன் மிக்சியில் அரைத்துவைத்துள்ள மசாலா கலவையை கொட்டி கிளறுங்கள்.

நன்கு வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.
 

.
மேலும்